2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஹட்டனில் சிறுநீர் கழிக்க ரூ.40 அறவீடு

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்   பிரதான பேருந்துகள் தரிப்பிடத்தில் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்க செல்பவர்களிடம் 40 ரூபாய் பணம் அறவிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை மிகவும் மோசமடைந்தது உள்ள நிலையில், எப்போதும் துர்மணம் வீசுவதாகவும், கழிவறை பகுதியில் உள்ள கழிவு நீர் குழியில் வெடிப்புகள் ஏற்பட்டு தாழ் இறங்கி உள்ளதால் கழிவு நீர் வெளியே செல்லும் அபாயம் தோன்றியுள்ளது என்றும் அங்கு சென்று திரும்புவோர் தெரிவித்தனர்.

இது குறித்து ஹட்டன் நகர சபை செயலாளர்  .டி.வி.பி.பண்டாரவிடம்   பேருந்து நிலைய அதிகாரி ,மற்றும் சாரதிகள், பயணிகள் ,நடத்துநர்கள், பாடசாலை மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் எந்த ஒரு நகரிலும் இவ்வாறு உள்ள கழிவறை பாவனைக்கு வழங்கப் படுவதில்லை.  ஏனைய பகுதிகள் உள்ள பொது கழிவறை கட்டணம் சிறுநீர் கழிக்க 10 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர்.

இருந்த போதிலும் மலையக பகுதிகளில் உள்ள அனைத்து பொது கழிவறை கட்டணமும் அதிகமாக உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி முறையான கட்டணம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,கட்டண விபரங்கள் மூன்று மொழிகளில் காட்சி படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                                               செ.தி.பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X