R.Tharaniya / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரில்உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு பொருள் விற்பனை நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஹட்டன் நகர் பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்கள் பொதுசுகாதார பரிசோதர்களினால் மேற்கொண்ட சோதனையின் போது சுகாதாரமற்ற முறையில் மற்றும் முறையான நடைமுறைகள் இல்லாமல் நடத்தப்படும் பல ஹோட்டல்கள் மற்றும் கடைகள்மீது சட்டநடவடிக்கை எடுத்து இந்த மாதம்12 ஆம் திகதி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
திடீர் சோதனையின் போது, ஹட்டன் நகரில்உள்ள.மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தில் அகற்றப்பட்ட மாடுகளின் எலும்புகள் அந்தக்கடைகளுக்குப் பின்னால் குவிந்து கிடப்பதைக் அவதானித்த அதிகாரிகள் சுற்றுச்சூழலுக்கு மாசடைவு தொடர்பில் மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர்களுக்கும் பொதுசுகாதார அதிகாரிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர்களிடம் இந்த எலும்புகளை மூன்று நாட்களுக்குள் அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
இன்றையசோதனை நடவடிக்கையில் அம்பகமுவ பொதுசுகாதார காரியாலய சுகாதார பரிசோதகர் அமில சோமதாசா மற்றும் ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன்மற்றும் அவரது குழுவினர் பங்கேற்றனர்.





3 minute ago
20 minute ago
26 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago
26 minute ago
54 minute ago