Editorial / 2018 ஏப்ரல் 30 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஸ, எஸ்.கணேசன்)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவன்புர பகுதியில் குடியிருப்பொன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) 7.30 மணியளவில் குறித்த வீட்டிலுள்ளவர்கள் ருவன்புர ஸ்ரீ சுமங்கலாராமய விகாரைக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், தீ விபத்தினால் குடியிருப்பு முற்றாக எரிந்துள்ளமையினால் உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளதுடன், உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .
தீ பரவலக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மின்சார கோளாரே தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

14 minute ago
25 minute ago
44 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
44 minute ago
55 minute ago