Freelancer / 2023 ஏப்ரல் 08 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.பிரபா
மலையகத்தின் அரசியல் செயற்பாடுகளில் புதிய அணியாக 'மலையக மக்கள் சக்தி' எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று ஹட்டனில் அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது.
'மலையக மக்கள் சக்தி' யின் தலைவரான கொட்டகலையை சேர்ந்த ராமன் செங்தூரனின் தலைமையில் உத்தியோகபூர்வமாக கடந்த 5ஆம் திகதி ஹட்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மத குருமார்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
அங்குராப்பன நிகழ்வின் போது 'மலையக மக்கள் சக்தி' கொடி அதன் தலைவரால் வெளியிடப்பட்டதுடன். கட்சியின் கொள்கை பிரகடனம் மலையக மக்கள் சக்தியின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயலலிதா மற்றும் சுதர்ஷினி ஆகியோரால் வெளியிடப்பட்டது.
நிகழ்வில் தலைவர் ராமன் செந்தூரன் அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டதுடன் வாழ்த்துரைகளை கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஜெயரத்ன ராஜா அவர்களும் சட்டத்தரணி எஸ்.லலிதாம்பிகை அவர்களும் வழங்கி வைத்தனர். R
37 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
52 minute ago