R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
கொரோனா தொற்று மீண்டும் வேகமாக இலங்கையில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், முகக் கவசங்களை உரியமுறையில் அணியுமாறு, பொதுமக்களிடம் ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கொரோனா தொற்றிலிருந்து பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.
எனவே ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதேப்போல் ஹட்டன் நகருக்கு வருகைத் தருபவர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் சுகாதார பரிந்துரைகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 Mar 2026