2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹட்டன்- சலங்கந்த வீதி பஸ்கள் ஓடவில்லை

R.Maheshwary   / 2021 ஜூலை 15 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன்- சலங்கந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (15) பணிபகிஷ்கரிப்பில் ஈபடுபட்டனர்.

குறித்த வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு மேலதிகமாக, மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையால் புதிதாக பஸ்ஸொன்றுக்கு சேவையில் ஈடுபட, அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

புதிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட குறித்த பஸ்ஸின் உரிமையாளர், இன்று (15) ஹட்டனிலிருந்து சலங்கந்த வரை பஸ்ஸை செலுத்திய வேளை, சலங்கந்த பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து, ஏற்கெனவே இப்பாதை ஊடாக சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசியல்வாதியொருவரின் பரிந்துரைக்கமைய குறித்த புதிய போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில், மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையிடம் தமது எதிர்ப்பை முன்வைத்துள்ளதாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த பணிபகிஷ்ரிப்பு காரணமாக, பயணிகள் அசெகளரிங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .