2025 மே 12, திங்கட்கிழமை

ஹட்டன்-டிக்கோயா மாநகரசபையின் சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தப்பட்டார்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் டிக்கோயா மாநகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று, மாநகரசபை அறிவித்துள்ளது. 

நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டதால், பொதுசுகாதார பரிசோதகரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே மேற்படி பரிசோதகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று மாநகரசபை அறிவித்துள்ளது.

எனினும் குறித்த பரிசோதகரை மட்டும் தனிமைப்படுத்தியமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் அ.நந்தகுமார் தெரிவித்தார்.

பொதுசுகாதார பரிசோதகர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும்பட்சத்தில் அவருடன் பணியாற்றிய நகரசபையின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றுத் தெரிவித்த அவர், அரசியல் பழிவாங்கலுக்காகவே, மேற்படி பொதுசுகாதார பரிசோதகரை தனிமைப்படுத்தியுள்ளனர் என்றும் சாடினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X