2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் டிப்போவின் நடத்துநர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம்

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

பஸ் பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அனுமதிச் சீட்டுக்களை வழங்காத சம்பவம் தொடர்பில், ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான டிப்போவில் பணிபுரியும் நடத்துநர் ஒருவர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளாரென, டிப்போ முகாமையாளர் அநுர தொடம்தென்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை வரை கடந்த 18ஆம் திகதி பயணித்த பஸ்ஸிலிருந்த பயணிகளை திடீரென டிப்போ பரிசோதகர்கள் பரிசோதித்தப் போது, பஸ்ஸில் பயணித்த 7 பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அனுமதிச் சீட்டுகளை நடத்துநர் வழங்கவில்லையென குறித்த பரிசோதகர்களிடம் பயணிகள் முறைபாடு செய்ததையடுத்து,  சம்பந்தப்பட்ட நடத்துநர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென, டிப்போ முகாமையாளர் அநுர தொடம்தென்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நடத்துநருக்கு எதிரராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள சம்பந்தப்பட்ட நடத்துநர் கடந்த சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகளின் போது, ஹட்டன் டிப்போவின் முகாமையாளராகவும் செயற்பட்டாரென்றும் அநுர தொடம்தென்ன

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .