Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 16 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்
“தமக்குக் கிடைத்துள்ள அரசியல் அங்கிகாரத்தையும் பலத்தையும்கொண்டு, ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்துவரும் அமைச்சர் திகாம்பரத்தின் நடவடிக்கை குறித்து ஹட்டன் நகர மக்களும் ஹட்டன் நகருக்கு வந்து செல்கின்றவர்களும் வெளிப்படுத்தும் ஆர்வமானது, மகிழ்ச்சிக்குரியதாகும்” என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மலையகத்தின் முக்கிய கேந்திர நிலையங்களில் ஒன்றாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாகவும் ஹட்டன் நகரம் விளங்குகின்றது. கடந்த காலங்களில், இந்த நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று, கோரிக்கை மட்டும் விடுக்கப்பட்டு வந்ததே தவிர, எவரும் முன்வந்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதை, நகர மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
“குறிப்பாக, நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹட்டன் புகையிரத நிலையப் பகுதி, வெறுமனே தகர வேலியால் சுற்றிலும் மூடி மறைக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த பொதுத் தேர்தலின்போது, அமைச்சர் ப.திகாம்பரம், ஹட்டன் நகரை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அமைச்சர் திகாம்பரம், தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சுப் பொறுப்பை ஏற்றவுடன், முதற்கட்டமாக புகையிரத நிலையத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த தகர வேலியை அகற்றியதுடன், பல்பொருள் அங்காடிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியையும் அகலமாக்கினார்.
இப்போது அந்த இடத்தில் வாகனங்கள் தரித்து நிற்க விசாலமான இடம் கிடைத்துள்ளது. இதனால், வாகன நெரிசல் இல்லாதுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைச் சகல மக்களும் பாராட்டி வரவேற்றுள்ளார்கள்.
கடந்த காலங்களில், நகரத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகக் கூறி சிலர், அமைச்சர்களை அழைத்துவந்து விளம்பரம் செய்தார்களே தவிர, அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை. எனினும், இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சர், நகர அபிவிருத்தி அமைச்சர் முதலானோரின் அனுசரணையோடு நகரம் அபிவிருத்தி அடையத் தொடங்கியுள்ளது. புகையிரத நிலையத்தின் பழைய நுழைவாயில் மாற்றப்பட்டு, புதிய நுழைவாயில் ஊடாக பயணிகள் வசதியாகச் செல்வதற்கு வாய்ப்பும் கிட்டியுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .