R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தூறல் மழை மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடும் மூடுபனி காரணமாக, இப்பகுதியின் வீதிகளில் பல்வேறு போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலைமைகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்தஅதிகாரி, மழையுடன்கூடிய கடும் மூடுபனி நிலவுவதால்,இந்தப் பகுதியில் உள்ள வீதிகள் வழுக்கும் தன்மை கொண்டதாகவும்,வீதிகள் தெளிவாக தெரியவில்லை என்றும் கூறினார்.
இதனால் வீதி பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, இந்தப்பகுதியில் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக வாகனம் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago