2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் பஸ் உரிமையாளர்களின் கவனத்துக்கு

Gavitha   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் பகுதியில் கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால், இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பஸ்களில், இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, நகரசபை சுகாதாரப் பிரிவுக்கு, ஹட்டன் - டிக்குாயா மேயர் எஸ் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஹட்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், அதிகளவு பயணிகள் ஏற்றிச் செல்வதாகவும் இதனால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருக்கைகளின் அளவுக்கு ஏற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், இதை தனியார் பஸ் உரிமையாளர்களும் நடத்துநர்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றும் தனியார் பஸ்களில் நெரிசலாகவே, பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X