Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 மார்ச் 27 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
கோதுமை மாவின் விலை குறைந்ததை அடுத்து பாண் இறாத்தல் ஒன்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் ஹட்டனில் உள்ள சில பேக்கரிகளில் மட்டும் கூடிய விலைக்கு பாண் விற்பனைச் செய்யப்படுகின்றது.
இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த நுகர்வோர் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைத்த நுகர்வோர் சிலர், 160 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை 150 ரூபாய்க்கு குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் ஹட்டனில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சிலர் அந்த விலைக்கு விற்பனை செய்வதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நகரிலுள்ள இரண்டொரு பேக்கரிகளில் ஒரு இறாத்தால் பாண் 150 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகின்ற போதிலும், இன்னும் சில பேக்கரிகளில் 180 ரூபாய்கும் 190 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது.
பாணின் விலையைக்கூட்டி விற்பனைச் செய்வதாகக் கூறப்படும் இரண்டொரு பேக்கரிகளில் இதுதொடர்பில் கேட்டபோது, பேக்கரி உற்பத்தி பொருட்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்தியே தாங்கள் உற்பத்திச் செய்கின்றோம். பாணும் அவ்வாறே உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால், பாணின் விலையை குறைக்கமுடியாது என்றனர்.
இன்னும் சில பேக்கரி உரிமையாளர்கள் பல கதைகளைக் கூறி, நுகர்வோரிடம் இருந்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். ஆகையால் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago