2026 மே 06, புதன்கிழமை

ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முக்கிய அறிவுரை

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ், எம். கிருஸ்ணா  
 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, ஹட்டன் பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டுமென, கேட்டுக்கொண்டுள்ள ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம் ஜெமில், முக்கிய அறிவுரைகள் சிலவற்றையும் வழங்கினார்.  

ஹட்டன்-டிக்கோயா நகரசபை பிரதான மண்டபத்தில், நகரசபையின் தலைவர் சடையன் பாலச்சந்திரன் தலைமையில், இன்று (29) விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்ட அறிவுரையை வழங்கினார்.  

இதில், நகரசபையின் உப- தலைவர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்,  

ஹட்டன் நகர பகுதியிலுள்ள ஓட்டோக்களுக்கு, ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் மூலமாகவும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தினாலும் ஸ்டிகர்கள் வழங்கப்படும் என்றும் அந்த ஸ்டிக்கர்கள் இல்லாத ஓட்டோக்களில் பயணிக்க வேண்டாம் என்றும் இதன்போது அவர் ​ெதரிவித்தார்.  

ஹட்டன் நகரிலுள்ள வர்த்த நிலையங்களின் உரிமையாளர்கள், தமது வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பயணியாளர்கள் தொடர்பில் முழுமையான குறித்து அறிக்கையை ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கும், ஹட்டன் பொலிஸாருக்கும் வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்  

 ஒவ்வொரு, வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் சி.சி.டி.வி கமெராக்கள் பொருத்தப்பட்டு, அதிலொரு கமெரா கட்டாயமாக பிரதான வீதியை, நோக்கி பொருத்தபட்டவேண்டும் என்றும் அவர் கூறினார்.  

ஹோட்டல்கள், வீடுகளில் தங்கியிருக்கும் வெளி பிரதேசங்களைச் சேர்ந்த பயணிகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் என்றும் நிறுத்திவைக்கப்படும் ஒவ்வொரு வாகனங்களிலும், சாரதியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்தவேண்டும் என்றும் ஒரே இடத்தில், அதிகநேரம் வாகனத்தை நிறுத்திவைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

வீடுகளிலோ, வர்த்தக நிலையங்களிலோ சேகரிக்கப்படும் குப்பைகளை பொதியாகக் கட்டிப் போடவேண்டாம் என்றும் குப்பை சேகரிக்கும் வாகனத்துக்கு, தாங்களாகவே குப்பைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

இதேவேளை, சந்தேக்துக்க இடமான வாகனங்கள், சந்தேகத்திற்கு இடமானவர்கள் நடமாடினால், உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .