2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் ரயில் நிலையத்தில் ஓய்வு மத்திய நிலையம் திறந்து வைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:51 - 1     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ரயில்கள் மூலம் மலையகத்துக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, ஹட்டன் ரயில் நிலையத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள, சுற்றுலா வசதிகள் மத்தியநிலையமானது திறந்து வைக்கப்பட்டு, அது ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வானது, மத்திய மாகாண முதலமைச்சர், சரத் ஏக்கநாயக்கவால் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுலா அமைச்சினால் 4.2 மில்லியன் ரூபாய் நிதி செலவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மத்திய நிலையத்தில் ரயில் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு கூடிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா அமைச்சின்  சுற்றுலா மறுமலர்ச்சி எண்ணத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, இந்த மத்தியநிலையமானது ஹட்டன் ரயில் நிலையத்தால் பராமரிக்கப்படவுள்ளதுடன், இவ்வாறான மத்திய நிலை யங்கள் இரண்டு ஏற்கனவே நானுஓயா, பட்​டிபொல ஆகிய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் பேராதனை உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் இந்த சுற்றுலா வசதிகள் மத்தியநிலையம் அமைக்கப்படுமென, மாகாண முதலமைச்சர், சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த மத்திய நிலையம் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், டென்மார்க்கிலிந்து இலங்கைக்க சுற்றுலா விஜயம் மேற்கொண்ட 2 பெண்களும் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டமை விசேட அம்சமாகும்.

 

 


  Comments - 1

  • V. Jeevanandaraja Tuesday, 04 September 2018 07:46 AM

    Its an appreciative process

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X