R.Maheshwary / 2021 நவம்பர் 09 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளை பொது சுகாதார சேவைப் பிரிவிற்குள் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என , பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் புபுது கருணாதிலக்க தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை இன்று வெளியான போது, மேற்படி எட்டு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த தியத்தலாவையில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் எட்டுப் பேரே, தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் ஐந்து வயது மற்றும் அதற்கு குறைவான வயதுகளைக் கொண்டு 27 சிறார்கள், தொற்றுக்குள்ளாகியுள்ளனர். மேலும் அக்காப்பகத்தில் பணியாளர்கள் ஐவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவ்வகையில் அக்காப்பகத்தில் மொத்தம் 32 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். என, பண்டாரவளை சுகாதார சேவை வைத்திய அதிகாரி டி.எம்.ஏ.ஆர். திசாநாயக்க கூறினார்.
இக்காப்பகத்தில் 52 பேருக்கு 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனைகள் மேற்கொண்ட போது, அவர்களில் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேரும், சிறுவர் காப்பகத்தில் 32 பேருமாக 40 பேரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் நேரடிக் கண்கானிப்புக்களுடன், 9 சிகிச்சை நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
21 minute ago
30 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
47 minute ago
2 hours ago