2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறி பதுளை நகரில் பேரணி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில்   முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) அன்று ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் உதித் குணதிலக்க வழக்கை மே 5 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .