Editorial / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்.துவாரக்க்ஷான்.
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுயுதீனின் கொழும்பு வீட்டில் பணியாற்றியபோது எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், மரணனமடைந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஜூட்குமார் ஹிசாலியின் சடலம், இரண்டாவது தடவையாக இன்று (13) மாலை 6.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நுவரெலியா நீதிமன்ற நீதவான் திருமதி லுசாக்காகுமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் மூன்று சிரேஸ்ட சட்டவைத்தியர்கள் ஊடாக சிறுமி ஹிசாலினியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஜூலை மாதம் (30) ஆம் திகதி பகல் 12.20 மணிக்கு டயகம மேற்கு தோட்ட சவக்குழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தோண்டப்பட்ட சடலம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தரகர் ஒருவரினால் ரிஷாட்டின் வீட்டுக்கு அச்சி சிறுமி பணிக்கு அமர்த்தப்பட்டார். இந்நிலையில், தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஜூலை (03)ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். 72 சதவீதமான எரிகாயங்களால், சிகிச்சை பலனின்றி ஜூலை (15) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் மரணம் நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததுடன் சிறுவர் தொழிலாளி தீமூட்டி கொல்லப்பட்டார் என மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல பிரதேசங்களிலும் பேசும் பொருளாக மாறியிருந்தது.
சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்த நிலையில் சிறுமி எவ்வாறு உயிரிழந்தார்,இதற்கு பொறுப்பு யார்,சிறுமிக்கான துன்பறுத்தல்,பாலியல் வன்புணர்வு என பல கோணங்களில் விசாரணைகள் தனி பொலிஸ் குழுவொன்று அமைத்து விசாரிக்கப்படுகின்றனது.
இதன்போது சந்தேக நபர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி,மாமனார் மற்றும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரித்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக்கிய குற்றச்சாட்டின் கீழ், ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதென சிறவர் உரிமைகள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் சிறுமியின் பெற்றோர் முறையிட்டிருந்தனர்.
இதற்கமைய கொழும்பு மேலதிக நீதவான் ரவீந்திர ஜயசூரிய முன்னிலையில் சிறுமி ஹிஷாலினியின் மரண சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சிறுமியின் சடலத்தை தோண்டி மீண்டும் இரண்டாவது பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்றிடம் கேட்டிருந்தார்.
அதற்கமைய சடலம் தோண்டப்பட்டு இரண்டாவது தடவையாக பிரேத பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்பின்னர், 15 நாள்களுக்கு பின் நேற்று(13)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு மலர்சாலை வாகனத்தில் டயகம மேற்கு தோட்ட மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஊர்மக்கள்,உறவினர்கள் மத்தியில் கண்டி மற்றும் டயகம பிரதேச கிறிஸ்தவ சமய குருமாரின் ஜெப வழிபாடுகளுடன் அதே புதைக்குழியில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago