Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவில், சிறுநீரக நோயாளர்களுக்கான குடிநீர் விநியோகிக்கும் ஹீங் ஆற்றுத் திட்டத்தை, இந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் நிறைவு செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வில் கலந்துகெண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கு போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், குறித்த திட்டத்துக்காக, அரசாங்கத்தினால், 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவில், இதுவரை 1.200 தொடக்கம் 1,400 சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு, குடிநீரே அடிப்படைக் காரணமாக விளங்குவதாக அறிந்துகொண்ட பின்னர், அரசாங்கம் ஹிங்கங்க நீர்த் திட்டத்தை கொண்டுவந்தது.
குறித்த வில்கமுவ பிரதேசச் செயலகப் பிரிவில் வசிக்கும் 35,000 குடும்பங்கள் நன்மை பயக்கும் வகையில், இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
13 minute ago
31 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
49 minute ago
2 hours ago