2025 மே 12, திங்கட்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஜூலை 16 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொணராகலை சிறிகல பொது வைத்தியசாலைக்கு அருகில் 6940 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் சனிக்கிழமை  (15) கைது செய்யப்பட்டதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை குற்றத்தடுப்பு  பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது. சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபர், மொனராகலை, சிரிகல, இரத்தினபிட்டிய பிரதேசத்தில்  வசிக்கும் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X