2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் அறுவர் கைது

மொஹொமட் ஆஸிக்   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு, ஹெரொய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் உட்பட ஆறு பேரை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, இன்று (14) இடம்பெற்றது.

தமக்குக் கிடைத்த தகவலின்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஹெரொய்ன் போதைப்பொருள் விற்பனை செய்தவரைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்து போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்த ஐவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களை, கண்டி நீதவான் கயான் அத்தநாயக்க முன்னால் ஆஜர் செய்தபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக கட்டுகஸ்தொட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .