Super User / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா )
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட நான்கு பேரை எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி அமரசிங்க இன்று புதன்கிழமை உத்தரவிடார்.
விசாரணை பூர்த்திடையவில்லை என்பதால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கட்டுநாயக்க பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தமையினலேயே இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை வர்த்தகர் ஒருவரிடமிருந்து மோசடியான முறையில் ஏமாற்றி பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட் மூன்று சந்தேக நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நீர்;கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் சட்டத்தரணி ஊடாக அண்மையில் பொலிஸாரிடம் சரணடைந்தார். இந்த வழக்கின் முறைப்பாட்டாளரான அப்துல் சலாம் முகம்மத் அஜ்வாத் என்ற வர்த்தகரிடம் பொலிஸார் போன்று நடித்து 3,500 யூரோ பணத்தை அபகரித்துள்ளனர என்ற சந்தேகத்திள் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago