2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மரத்தில் நபர் ஏறியதால் கொழும்பில் பதற்றம்

Super User   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – 05 பொலிஸ் பார்க்கிற்கு முன்னாலுள்ள மரமொன்றில் நபரொருவர் ஏறியமையினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

களுகெல்ல, துமோதரவைச் சேர்ந்த ஆர்.டி சமரநாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரத்தின் மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அங்கவீனரான இவர், ஜோர்தானில் பணிப்பெண்ணாக தொழில்புரியும் தனது மனைவியை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருமாறு  வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸாரின் துரித நடவடிக்கையை அடுத்து குறித்த நபர் மரத்திலிருந்து சற்று நேரத்திற்கு முன்னர் கீழே இறக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X