Super User / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
கொழும்பில் பஸ்ஸில் பயணம் செய்த ஜப்பானிய பெண்ணொருவரை பாலியல் ரீதியில் தொந்தரவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை செப்டெம்பர் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் இப்பெண் செய்த முறைப்பாட்டில், பஸ்ஸில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆண், தன்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும் முறையற்ற வகையில் தன்னை தொட்டதாகவும் தெரிவித்துள்ளர்.
ஜப்பானின் கம்மாச்சி பிரதேசத்தை சேர்ந்த தான், குறுகிய கால விடுமுறையில் இலங்கைக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து, குருநாகல், நாரம்மலயைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் மது போதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்தேக நபர் நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபரை செப்டெம்பர் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
bzukmar Wednesday, 07 September 2011 02:58 AM
அண்மைக் காலமாக இலங்கையரின், பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய செய்திகள் (ஹெய்ட்டியில் ராணுவ வீரர்கள்,சிங்கப்பூரில் நமது மாணவர், பரீட்சை வளாகத்தினுள் சிறுமி வல்லுறவு) நமது நாடு எங்கே செல்கிறது? மக்கள் மனோ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அதிகாரிகள் இது விடயமாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
Reply : 0 0
M.I. Nousath Wednesday, 07 September 2011 06:10 PM
என்னதாய்யா நடக்குது?
Reply : 0 0
xlntgson Wednesday, 07 September 2011 09:19 PM
மது போதையில் இருந்தார் என்பதே போதுமானது இவர் புத்தி சுவாதீனமில்லாதவரைப் போன்று என்று!
மது போதையில் இருப்பவர்களை இறக்கி விட்டுப் போகவேண்டும், அவர்கள் மது போதையில் உளறுவது கேட்க சகிக்காது!
இளைஞர் யுவதிகளைக் காக்க அரசு திருமணங்கள் அதிகரிக்கும் வண்ணம் உதவித் தொகைகள் செய்ய வேண்டும். மேலும் பெண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago