2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தொலைபேசிகளை திருடியதாக 14 வயது மாணவர்கள் ஒப்புதல்

Super User   / 2012 மே 17 , பி.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாஸாவிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் பெறுமதி வாய்ந்த செல்லிட தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டை கொழும்பின் முன்னிலை பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் மூவர் ஒப்புக்கொண்டனர்.

75,000 ரூபா பெறுமதியான பிளக்பெரி ரக தொலைபேசி, 25,000 ரூபா பெறுமதியான இரு தொலைபேசிகள் ஆகியவற்றை இவர்கள் திருடியுள்ளனர்.

தரம் 9 இல் பயிலும் 14 வயதான இந்த மாணவர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இம்மாணவர்களின் வயது கருதி இவர்களுக்கு தண்டனை அளிக்கப்படவில்லை. இம்மாணவர்கள் 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இம்மாணவர்களின் வயதை கருத்திற்கொண்டு அவர்களை விடுதலை செய்ததாகவும் இம்மூவரும் மூன்று வருடகாலத்திற்கு அவர்களின் நன்னடத்தையை நிரூபிக்க  வேண்டும் எனவும் நீதவான் கனிஷ்க விஜேரட்ன கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X