2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தெனியாயவில் மண்சரிவு அபாயம்; 18 குடும்பங்கள் வெளியேற்றம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெனியாய, விஹாரஹேன பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியிலிருந்து 18 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. 

பாதுகாப்பான பகுதியில் அவர்ளுக்கு தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கையை கொடபொல பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவினால் இரு வீடுகள் ஏற்கெனவே சேதமடைந்துள்ளதாகவும் எந்த சூழ்நிலையிலும் அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் தயாராகவிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் கூறினார். (டி.ஜி.சுகதபால)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X