2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பில், டெங்கு 20 வீதம் அதிகரிப்பு

Kanagaraj   / 2013 மே 30 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதங்களுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கும் இடையில் ஒப்பிடுகையில், கொழும்பில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு நகர சுகாதார வைத்திய அதிகார் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் கொழும்பில் டெங்கினால் பாதிக்கப்பட்டு ஐந்து பேர் மரணமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 க்கும் அதிகமாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 55 வீதமானோர் மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு பரவுவதற்கான சுற்று சூழலை வைத்திருக்கின்ற 51 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளன.

அவ்வாறான பாடசாலைகளுக்கு இறுதி எச்சரிக்கை கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  கொழும்பு மாநகர சபை அதில் பிரபல்யமான பாடசாலைகளும் அடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X