2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

உயிரை பறித்த 200 ரூபா

Super User   / 2013 ஏப்ரல் 15 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுபுன் டயஸ்

ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது காணமல் போன 200 ரூபா தொடர்பில் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிந்த சம்பவமொன்று பிலியந்தலையிலுள்ள பட்டகெத்தர எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் தடிகள், கத்திகள் மற்றும் மண்வெட்டிகள் என்பவற்றை பயன்படுத்தி தமக்குள் சண்டையிட்டுள்ளனர். இந்த சண்டையில் டொன் வசந்த விஜேதுங்க எனும் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சண்டையிடும்போது காயமடைந்த மூவர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X