Kogilavani / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நடன விருது வழங்கல் விழா 2011 எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை கொழும்பு ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், நடன துறையில் பெரும் பங்காற்றிய கலாசூரி பியசார சில்பாதிபதி நடன திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
இதன்போது, 20 முதலாம் இடங்களையும் 15 இரண்டாம் இடங்களையும் 10 மூன்றாம் இடங்களையும் மற்றும் தமிழ் மொழிமூலம் 8 முதலாம் இடங்களையும் 4 இரண்டாமிடங்களையும் மற்றும் 1 மூன்றாமிடத்தையும் பெற்றவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள், பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழுவினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago