2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விபசார குற்றச்சாட்டில் கைதான 3 பெண்கள் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.சாஜஹான்

விபசார  குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் மூவரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ்.வீரதுங்க பிணையில் விடுத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது ஒவ்வொருவரையும் 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் நீதவான் விடுவித்துள்ளார்.

சீதுவை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றை நடத்திவந்ததகாக் கூறப்படும் பெண்ணொருவர் உட்பட மேலும் 2 பெண்களே மேற்படி குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி சந்தேக நபர்களை சீதுவை பொலிஸார்; கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய  நிலையில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X