2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 75 பேருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ரி.பாருக் தாஜுதீன்)

படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 75 பேரை செப்டெம்பர் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டார்.

ஓகஸ்ட் 25 ஆம் திகதி நீர்கொழும்பிலிருந்து 27 மைல் தொலைவில் 27 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடையாததால் இவர்களை விளக்கமறியலில் வைக்க அனுமதிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளான டி.சேனாதீர மற்றும் வாசல விஜயரட்ன ஆகியோர் கோரினர்.

இறுதியில் 75 பேரை செப்டெம்பர் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, சிறார்கள் இருவரை 50,000 ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X