2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கடுவளை விபத்தில் 3 பேர் பலி:10 பேர் படுகாயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 16 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடுவளை வெலிவிட்ட எனுமிடத்திலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற திருமண வீடொன்றுக்கு சென்று யட்டயந்தோட்டைக்கு திரும்பிக்கொண்டிருந்த   வேன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் லொறி ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தார்.காயமடைந்தவர்களில் கைக்குழந்தைகளும் அடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X