2025 மே 07, புதன்கிழமை

'இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஊடகத்துறை பங்களிப்பு நல்குகிறது'

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஊடகத்துறையும் ஊடகத்துறை துறை சார்ந்த பயிற்சிகளும் முக்கிய பங்குகளை வகிப்பதாக புத்தளம் வலய கல்வி பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பிரதி கல்வி பணிப்பாளரும் புத்தளம் ஒன்லைன் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவருமான
இஸட்.ஏ. சன்ஹீர் தெரிவித்தார்.

புத்தளம் ஒன்லைனின் இணை அனுசரணையில் புத்தளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை (20) காலை நடைபெற்ற ஊடக செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“சமூக மாற்றத்தை நோக்கிய ஒரு பயணமாக, புத்தளம் நகர மக்களின் குரலாக புத்தளம் ஒன்லைன் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி வருகின்றமை பாராட்டத்தக்க ஒன்று.

இந்த இணயத்தளம் ஆரம்பிக்கப்பட்ட போது நவீன யுகத்தில் இப்படியான ஓர் இணையத்தளம் தேவையா என எம்மிடம் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. ஆனால், இன்று வெளிநாடுகளில் கல்வி கற்கும் நமது பிரதேச மாணவர்கள் புத்தளம் நகரம் சார்பான பல வரலாற்று தகவல்களை இதிலிருந்து பெற்று பிரயோசனம் அடைந்து வருகின்றனர்.

1950ஆம் ஆண்டு கால பகுதிகளை கொண்ட பல வரலாற்று சான்றுகளை புத்தளம் ஒன்லைன் சுமந்திருப்பதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இந்த இணையத்தளம் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X