2025 மே 05, திங்கட்கிழமை

‘எனது கூட்டத்துக்கு வரவேண்டாம்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்றைத் திறந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"வெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் ஹம்பாந்தோட்டையில் எமக்கு சிறந்த துறைமுகம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். அங்கு வந்து தொழிற்சாலையை அமைக்குமாறும் கூறுகிறார்.

எனினும் இலங்கை திரும்பியதும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மிகப் பெரிய நீச்சல் தடாகம் என்கிறார்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X