2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

‘ஐ.தே.கவுக்கு வாக்களித்தவர்களே ஆர்ப்பாட்டம் செய்தனர்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான் 

“போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் அநேகர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தவர்களாவர். ஆர்ப்பாட்டம் செய்யக் கூடிய உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. இல்லாவிட்டால் இதைவிடவும் பிரச்சினை ஏற்படும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேற்றுப்பிற்பகல் வருகைதந்திருந்த, அவர், கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிச்சந்திர, லலந்த குணசேகர பார்த்து, நலன்விசாரித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தண்டப் பணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் இவ்விரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

 “அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆயினும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கத்தோலிக்கர்கள் சிறைச்சாலையில் உள்ளனர். இதனால், நத்தரர் உற்சவத்தைக் கொண்டாட முடியாத நிலைமை அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருந்தது. 

ஜனவரி இரண்டாம் திகதி பாடசாலை ஆரம்பமாகவுள்ளது. ஆயினும், தமது பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுக்க முடியாமல், நத்தார் பெருநாளை குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 

 அதிகரிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் அநேகர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தவர்களாவர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. இல்லாவிட்டால் இதைவிட பிரச்சினை ஏற்படும்.. 

நாங்கள் நாட்டை க் கட்டியெழுப்பியுள்ளோம். இதனை யாரும் மறுக்க முடியாது. வெறுமையாக இருந்த காணியில் துறைமுகம் அமைத்தோம். துறைமுகத்தை நகரமாக்கினோம். தற்போது எல்லாவற்றையும் விற்பனை செய்ய ஏலம் விட்டிருக்கிறார்கள்.  

நாங்கள் காணிகளின் பெறுமதியை இதன் மூலம் அதிகரித்திருக்கிறோம். அடுத்த வருடம். பிரச்சினைக்குரிய வருடமாக அமையும் என நினைக்கிறேன். ஏனென்றால், தற்போது அரசியலமைப்பு, தனியார் மயப்படுத்தல் என கூறுகிறார்கள். அவ்வாறு கூறுகின்றவர்களோ, நாட்டை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X