2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'காணாமற் போனோருக்கான அலுவலகம் படையினரையும் தேடி அறிக்கையிடும்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

காணாமற் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்படுவது, யுத்தத்தில் காணாமற்போன விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைத் தேடி அறிக்கையிடுவதற்காக மட்டுமல்ல, விடுதலைப் புலிகளால் காணாமலாக்கப்பட்ட 5,600 இராணுவத்தினரையும் தேடி அறிக்கையிடும் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில், நேற்று, வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்படுவது தொடர்பில் பலரும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு, ஜனாதிபதிக்குச் சேறு பூச முற்படுகின்றனர். குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளால் இராணுவத்தினருக்கோ, மக்களுக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்படமாட்டாது எனத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் கட்சி விழிப்புடன் இருக்கும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X