Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி பயனாளிகளுக்காக, வருடமொன்றுக்கு 3,972 வீடுகளை நிர்மாணிப்பதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,
மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும், சமுர்த்தி உதவிகளைப் பெறும் தலா ஒரு குடும்பம் வீதம் தெரிவுசெய்யப்பட்டு, இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான நிதி, சமுர்த்தி அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
இதனடிப்படையில், முதற்கட்டமாக 331 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றும் ஒரு வீட்டுக்கான நிர்மாணப் பணிகளுக்கு, மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாயை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago