Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டுஅபிவிருத்திச் செயற்பாட்டின் பொழுது திருட்டுச் செயல்களில் ஈடுப்பட்டோரை தோற்கடிப்பதே நாம் எதிர்க்கொள்ளும் பிரதான சவாலாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பிரச்சினைகளை தீர்கும் பொழுது சரியான முடிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு கல்விமான்களின் அனுபவங்கள் மற்றும் அறிவு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலற்தரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'தீர்மாணங்களை மேற்கொள்ளும்பொழுது கல்விமான்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்படுவதற்கான சந்தர்பங்கள் கடந்த காலத்தில் வழங்கப்படவில்லை.
நாட்டில் மாத்திரமன்று எங்களுடைய துறைமுக அமைச்சினது பிரச்சினைகளை தீர்பதற்கு கல்விமான்களின் கருத்துக்களை கருத்திற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். நாம் தற்சமயம் துறைமுக துறைச்சார் ஆலோசனை குழுவொன்றினை நியமித்துள்ளோம். இதற்கு மேலதிகமாக செயற்பாடுகளின்பொழுது கல்விமான்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமான காரணியாகும்.
இவ்வாறானதோர் கலாசாரம் கடந்த காலத்தில் காணப்படவில்லை. ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாம் ஊழலினால் நிரம்பப் பெற்ற சமூகத்தினையே பாரமெடுத்தோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago