2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'தெரியாமல் அபிவிருத்தியடைகின்றது'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'நாட்டில் மறைமுகமான அபிவிருத்திக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு துறை முகத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதன்மூலம், இலங்கையின் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம், இலங்கை அபிவிருத்தி அடையும்' என்று விசேட பணிப்பொறுப்புகள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டாவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'கொழும்பு துறை முகத்துடன், சிங்கப்பூர் மற்றும் டுபாய் போன்ற நாடுகளில் உள்ள மிகப்பெரிய நகரத்தை உருவாக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. சீன அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள இத்திட்டத்துக்கு, கொழும்பில் 269 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படவுள்ளது. நாட்டின் பசுமை பேண 91 ஏக்கரும் சீன அரசாங்கத்துக்கு 20 ஏக்கரும் வழங்கவுள்ளோம்.

மிகுதி பகுதியில் இருநாட்டு அரசாங்கமும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்' என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

'ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி வர்த்தக வலையங்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். கப்பல்களுக்கான எண்ணெய் நிரப்பு நிலையம், கப்பல் கட்டும் தளம், எரிவாயுத் தளங்கள் போன்றவை இவற்றுள் உள்ளடங்குவதோடு, திருகோணமலையிலும் வர்த்தக வலயமொன்று அமைக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X