Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாத் துறையை விருத்திச் செய்யும் முகமாக, விரைவில் சினிமாத்துறைசார் பாடசாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இலங்கை சினிமாத் துறையின் 70 வருடப் பூர்த்தி மற்றும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு 45 வருட நிறைவையிட்டு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி சினிமா மண்டபத்தில், கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,
“நீண்ட காலத்துக்குப் பின்னர், சரசவி திரைப்பட விருது விழாவை இம்முறை நடத்த முடிந்துள்ளது. இந்நிலையில், தலுகம சரசவி திரையரங்கை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த வருட இறுதிக்குள், நாட்டிலுள்ள அனைத்துச் சினிமாத் திரையரங்குகளையும் டிஜிட்டல்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், பழைய திரைப்படங்களைப் பாதுகாப்பதற்கான விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி திரைப்பட விருது விழாவை, பத்து வருடங்களுக்குப் பின்னர், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் சவால்களை இனங்கண்டு, உள்நாட்டுச் சினிமாத் துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை, சினிமாத் துறையினர் எடுக்க வேண்டும். இதற்காக முன்வைக்கப்படும் யோசனைகளைக் கருத்திற்கொள்ள, அரசாங்கம் தயாராக உள்ளது” என்று, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago