Niroshini / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டப் பின்னர், பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மலேஷியா - ஈப்போவில் கடந்த வாரம் நடைபெற்ற 'ஆசியா டாவோஸ்' (Davos of Asia) என்று அழைக்கப்படும் பன்ங்கோர் சர்வதேச அபிவிருத்தி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித் அவர்,
நிலையான அபிவிருத்தி இலக்குக்கேற்ப நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட உலகளாவிய ரீதியிலான அறிவு மற்றும் கருத்து பரிமாற்றல் நிகழ்வில் இலங்கை சார்பாக கலந்துக்கொள்வதில் நான் பெருமகிழ்சியடைகின்றேன்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ், முக்கிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மாற்றங்கள் நிகழும் இக்காலப்பகுதியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
ஆகவே, இந்நிகழ்வின் மூலமாக எமக்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படும் என நம்புகின்றேன் என்றார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago