Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 02 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் விருப்பத்துக்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது. உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்திருக்கிறது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை இந்த உபகுழுவுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த உபகுழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உலமா சபையினர் மற்றும் துறைசார் நிபுணர்களின், புத்திஜீவிகளின், இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனைகளைப்பெற்றே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான முடிவை அரசாங்கம் அல்ல, முஸ்லிம்களாகிய நாங்களே எடுக்கவேண்டும்.
தற்போது அமுலிலுள்ள 1951ம் ஆண்டின் 16 பிரிவில் உள்ள இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள திருமணம் முடிப்பதற்கான பெண்ணின் வயதெல்லை குறித்த விதி சர்வதேச சமவாயங்களுக்கு உட்பட்டதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தனியார் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் பல ஆண்கள், பெண்களுக்கு அநீதி இழைத்து வருவதும் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகின்றது. பெண்கள் மீதான அநீதங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் இடம்பாடாகும் விதிகளில் மாற்றம் கொண்டு வர பலர் கோரிக்கை விட்டு வந்துள்ளனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒரு சில திருத்தங்கள் தேவை என்ற கருத்தில் உலமா சபையும் இருப்பதாக அறியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
18 minute ago
50 minute ago