2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

‘வாசிக்க எமக்கு நேரமில்லை’

Kogilavani   / 2017 ஜனவரி 31 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உலமா சபைக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கான பதில், உலமா சபையின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிலை அவசரமாக வசிப்பதற்கு எமக்கு நேரமில்லை” என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும், இதனை விட முக்கியமான பல விடயங்களில் நாம் ஈடுபட்டுள்ளதால், நேரம் கிடைக்கப்பெற்ற பின்னர் அந்த பதிலை நாம் வாசிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

அல்-குர்ஆனில் சில ஆயத்துக்களை குறிப்பிட்டு, அவற்றுக்கான விளக்கங்களையும் பதில்களையும் கோரி பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்புக்கு அனுப்பிய கடிதத்துக்கான பதில் கடிதத்தை உலமா சபை கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X