2025 நவம்பர் 19, புதன்கிழமை

‘வரலாற்றில் முதல் தடவையாக வழக்கு பதிவு’

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றில் முதல் தடவையாக, அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யவும் இடமளிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஹோமகமவில் நேற்று   இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கத்தினால், சர்ச்சைக்குரிய திறைசேரிப் பிணைமுறி தொடர்பாக, சுயாதீன விசாரணை மேற்கொள்வதற்கு அவசியமான சூழலைத் தயார்படுத்தியுள்ளது. அந்தவகையில், மத்திய வங்கியின் திறைசேரிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களைத் தண்டிப்பதில், ஐக்கிய தேசிய கட்சி பின்னிற்கப் போவதில்லை.

"வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை நடத்த, கோப் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X