Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
அளுத்கம தர்கா நகர் ஆலிம் ஸாஹிப் அப்பா தர்ஹாவில், ஆத்மீகஙானி குத்புல் ஸமான் சங்கைக்குரிய அஷ்ஷெய்க் உஸ்மானுல் மஹ்தூமியின் (ரஹ்) ஞாபகர்த்தமாக நடைபெறும் 155ஆவது வருட மனாகிப் மஜ்லிஸின் கொடியேற்ற வைபவம், நாளை (24), அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும்.
சங்கைக்குறிய அஷ்செய்யித் அஷ்ஷெய்க் ஜிப்ரி பின் ஷெய்க் முகம்மது ஜிப்ரி மௌலானா, சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் முகம்மத் அபூபக்கர் ஜிப்ரி பின் ஸெய்யத் பதல் ஜிப்ரி மௌலானா, சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அஸ்லம் ஜிப்ரி மௌலானா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், சங்கைக்குரிய காலிப் அலவி ஹாஜியார் பின் அஷ்ஷெய்க் அப்துல்லா ஹாஜியார் உட்பட உலமாக்கள், தரீக்காக்களின் முரீதீன்கள் ஆகியோர், நிகழ்வில் பங்குபற்றுவர்.
தமாம் பெரிய கந்தூரி மஜ்லிஸ், எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி இரவும் 2ஆம் திகதி பகலும் நடைபெறும்.
1ஆம் திகதி இரவு மஷாயிகுமார் ராத்திபு மஜ்லிஸும், மார்க்கச் சொற்பொழிவும், துஆ பிரார்த்தனையும், ஸியாரத் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
மேற்படி மஜ்லிஸை முன்னிட்டு, விசேட பஸ் சேவையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
6 minute ago
9 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
24 minute ago
54 minute ago