Kogilavani / 2011 ஜூன் 03 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.எச்.எம்.பௌஸான்)
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற, ஊழியர் ரொஷான் சானகவின் மரணத்திற்கு காரணமான பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கும் தொழிலாளர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பியகம சுதந்திர வர்த்தக வலயத்துக்கு முன்னால் சுமார் 2500 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'மே 30 கட்டுநாயக்க சம்பவத்தை எதிர்ப்போம்', எனவும் 'ஓய்வூதியத்தை வேண்டி உயிர் துறந்த சகோதரனுக்கு எமது ஆசீர்வாதம்' என்ற சுலோகங்களோடும் அரசாங்கத்திற்கெதிராக கோசம் எழும்பியும் ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதன்போது விஷேட அதிரடிப்படை வீரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்ததையும் பியகம பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்நது.
.jpg)
.jpg)
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago