Super User / 2011 ஜூன் 20 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோட்டல் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய தொழில் பயிற்சிப் பாடநெறிகளை பயில்வதற்காக வேண்டிய நேர்முகப் பரீட்சையை இம்மாதம் நடத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை தீர்மானிதுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஹோட்டல்துறையில் உள்ள தொழிலாளர் தட்டுப்பாட்டைக் கருத்திற்; கொண்டு தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை இப்பயிற்சிப் பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி சமையற்கலை, போசனசாலை சேவகர்கள், ஹோட்டல்அறை சேவகர்கள் போன்ற துறைகளுக்காக 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படுவர்.
க.பொ.த (சா.த) சித்தி பெற்ற, மற்றும் சித்தி பெறாத இரு தரப்பினர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம். பாடநெறிகள் அனைத்தும் இலவசமாக நடத்தப்படுவதோடு பயிற்சி பெறும் கால கட்டத்திற்குள் ஒரு கொடுப்பனவும் அவர்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி முடிவடைந்ததும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப்படும் சான்றிதழ்களும் வழங்குவதோடு திறமையாக பாடநெறிப் பயிற்சிகளை முடித்;துக் கொள்பவர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பெறும் கால கட்டத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பயிற்சிகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை காலை 9:30 மணியிலிருந்து பிற்பகல் 3:30 மணி வரை இலக்கம் 242, ஹவலக் ரோட், கொழும்பு – 05 யிலுள்ள தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கொழும்பு மாவட்டக் காரியாலய அலுவலகத்தில் நடைபெறும்.
மேலதிக விபரங்களை 2587258 தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago