Suganthini Ratnam / 2011 ஜூலை 20 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
தங்கொட்டுவ சமுர்த்தி வீதியிலுள்ள தங்குமிட விடுதியொன்றில் நடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அவ்விடுதியின் முகாமையாளருடன் 7 பெண்களையும் கைதுசெய்துள்ளனர்.
இந்த முற்றுகை நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் இந்த விடுதி 3 தடவை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் 19 முதல் 40 வயதுடையவர்களென்பதுடன் அவர்கள் வென்னப்புவ, நீர்கொழும்பு, கொஸ்கம, பாணந்துறை, ஜாஎல, வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்தவர்ளெனனவும் பொலிஸார். தெரிவித்தனர்.
பொலிஸ் தலைமையகத்தின் உதவி பொலிஸ்மா அதிபர் மஹேஸ் சமரதிவகாரவின் மேற்பார்வையில் பாணந்துறை வலான மத்திய குற்றவொழிப்பு நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் பாலித பெர்னாண்டோ, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க ஆகியோரின் உத்தரவிற்கிணங்க அப்பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரிய தலைமையிலான குழுவினரே இந்த முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago