2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பெண்ணொருவருக்கு ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பிய நபர் விளக்கமறியலில்

Super User   / 2011 ஜூலை 20 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

செல்லிடத் தொலைபேசியில் எம்.எம்.எஸ். மூலம் பெண்ணொருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை ஓகஸ்ட் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

இனந்தெரியாத நபர் ஒருவர் தனக்கு அடிக்கடி பாலியல் படங்களையும் ஆபாச வசனங்களையும் அனுப்பி தொல்லைகொடுப்பதாக கொழும்பு 2 ஐ சேர்ந்த மேற்படி பெண் கொம்பனித்தெரு பொலிஸில் புகாரிட்டிருந்தார்.

இது தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸார் விசாணை நடத்தியபோது ஆபாச படங்களை தொலைபேசி இலக்கம் மேற்படி சந்தேக  நபருக்குரியது என்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து, கொம்பனித்தெருவைச் சேர்ந்த மேற்படி நபர் பொலிஸார் கைது செய்யப்பட்டு, நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதே பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் தனது தொலைபேசியை ' ரீ லோட்' செய்வதற்காக புத்தகமொன்றில் அப்பெண் தனது தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்த நிலையில், சந்தேக நபர்  அந்த இலக்கத்தை அறிந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஆபாச எம்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குற்றத்தின் பாரதூரதன்மையை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரை ஓகஸ்ட் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X