Super User / 2011 ஜூலை 26 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுப்பொதிகளை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. அவ்வுணவுப்பொருட்களை உட்கொள்ளும்போது, அச்சடிக்கப்பட்ட தாள்களில் காணப்படும் இரசாயனங்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே இதற்கு காரணமாகும்.
செய்தித்தாள்களிலுள்ள ஈயம், உணவுப்பொதிக்குள் அகத்துறிஞ்சப்படும் அதன்மூலம் அது உடலுக்குள் செல்லும் இதனால் மனிதர்களுக்கு நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவர் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் மதிய உணவுப்பொதிகளை விற்பனைசெய்யும் 105 விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து சுகாதார சான்றிழதலொன்றை பெற்றுக்கொள்ளுமாறும் விற்பனையாளரை இனம்காண்பதற்காக உணவுப்பொதிகளில் முத்திரையொன்றை பொறிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
உணவுப்பொதி விற்பனையாளர்களால் விற்கப்படும் மதிய உணவுப்பொருட்களில் மூன்றில் ஒருபகுதி நண்பகல் அளவில் மோசமடைந்துவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதிய உணவுப்பொருள் தயாரிப்பாளரின் பெயர், தயாரிக்கப்பட்ட திகதி, நேரம் என்பனவற்றை விற்பனையாளர்கள் குறிப்பிட வேண்டும் எனவும் இவ்விதிகளை மீறினால் அவர்களின் பதிவுகள் ரத்துச்செய்யப்படும் எனவும் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
kulathoora Wednesday, 27 July 2011 03:02 PM
செய்திதாள்களில் பொதிசெய்து உணவுப்பொருள்களை விற்பதனை தடைசெய்து நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றலாமே இலங்கையர் அனைவருக்கும் நன்மை அளிக்கும்.
Reply : 0 0
ris Wednesday, 27 July 2011 05:10 PM
இது உண்மையிலேய ஒரு சிறந்த விடயமாகும். இது கண்டிப்பாக அமுலுக்கு வர வேண்டும்...
Reply : 0 0
jaliyuath Wednesday, 27 July 2011 06:39 PM
அப்படியா செய்தி ?
Reply : 0 0
Nesan Wednesday, 27 July 2011 06:42 PM
இந்த செய்தி வெளியான செய்தித்தாளிலும் உணவு சுற்றப்படாமல் இருந்தால் சரி.
Reply : 0 0
xlntgson Wednesday, 27 July 2011 09:00 PM
பொலித்தின் lunchsheet பாவிக்கக்கூடாது என்று சில காலத்துக்கு முன் கூறப்பட்டதே அதற்கு என்னாயிற்று?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago