Kogilavani / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
பதனிடப்பட்ட உணவு மற்றும் பொதியிடல் தொடர்பான சர்வதேச கண்காட்சி எதிர்வரும் 26,27,28 ஆகிய தினங்களில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கைத்தொழில், வணிக துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இக்கண்காட்சி குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இக்கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன, சார்க் நாடுகளின் உற்பத்தியாளர்கள் தமது காட்சி கூடங்களை இங்கு அமைக்கவுள்ளனர்.
இலங்கையில் இதுவரைக்கும் 4,400 நிறுவனங்கள் பதனிடல் மற்றும் பொதியிடல் துறையில் ஈடுபட்டு வருவதகவும், சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் வரை இதில் பணியாற்றுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.
.jpg)
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago